பல்லடம் விசைத்தறி ஸ்டிரைக் தொடரும்: உரிமையாளர்கள் முடிவு
விசைத்தறி வேலை நிறுத்தத்தை தொடர்வது, என விசைத்தறி உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.;
கோப்பு படம்
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கூலி ஒப்பந்தத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டிரைக் நிலவரம் தொடர்பாக பல்லடம், சோமனுார், அவினாசி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் பல்லடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதில், ஸ்டிரைக்கை வலுப்படுத்துவது என, முடிவெடுத்துள்ளனர்.