குற்றச்செயல்களை தடுக்க பல்லடத்தில் போலீஸார் விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், போலீஸார் சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், போலீஸாரின் விழிப்புணர்வு அணி வகுப்பு வாகன ஊர்வலம், இன்று நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை டிஎஸ்பி. வெற்றிச்செல்வன் துவக்கி வைத்தார். இதில் பல்லடம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட 6 இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸார் உள்பட 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம், பல்லடம் கடைவீதி, நால்ரோடு, பஸ் ஸ்டாண்டு ரோடு உள்ளிட்ட இடங்கள் வழியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறே நடைபெற்றது.