பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2021-06-14 13:48 GMT
பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்றவர் கைது
  • whatsapp icon

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னமும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், ரகசியமாக வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது, பல இடங்களில் அதிகரித்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பல்லடம் , மங்கலம் ரோட்டில் வாய்க்கால்மேடு பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் ஒருவர், போலீஸை கண்டு தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில், அவர் பல்லடம் பிடிஓ காலனியை சேர்ந்த சீனிவாசன்,27, என்பதும், மது பாக்கெட் வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்வதும்  தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

Tags:    

Similar News