பல்லடம் அருகே கழன்று ஓடிய அரசுப் பேருந்து: தப்பிப் பிழைத்த பயணிகள்

பல்லடம் அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் சாலையில் கழன்று ஓடியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

Update: 2022-02-20 03:31 GMT

டயர் கழன்று ஓடிய அரசுப் பேருந்து.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கோவை செல்லும் அரசுப் பேருந்து (TN38 N3048) 47 பயணிகளுடன் நேற்று மதியம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

பல்லடம் தாராபுரம் சாலை, கள்ளக்கிணறு அருகே வந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் கழன்று, அரை கிலோ மீட்டர் தூரம் சாலையில் உருண்டோடியது. சுதாரித்த ஓட்டுநர் காமராஜ், உடனடியாக 'பிரேக்' போட்டு பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். டயர் கழன்ற அரசு பேருந்தை 'கிரேன்' உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.  

Tags:    

Similar News