நாய்க்கு 'ஆயுசு கெட்டி'.
பல்லடம் அருகே 3 ஆண்டுகளுக்கு முன் கிணற்றில் விழுந்த நாய் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காமநாய்க்கன்பாளையத்தில் போலீஸ் குடியிருப்பு அருகே சுமார் 60 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் செல்லமாக பெண் நாய், கடந்த 3 ஆண்டுகளுக்கு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. நாயை மீட்க பொது மக்கள் முயற்சி செய்தனர்.ஆனால் நாயை மீட்க முடியவில்லை. இருப்பினும் கிணற்றுக்குள் நாய் குரைத்தவாறு உயிருடன் இருந்தது. நாய்க்கு தேவையான உணவுகளை பொது மக்கள் கிணற்றுக்குள் போட்டு வந்தனர்.
இந்நிலையில் கிணற்றுக்குள் நாய் விழுந்தது குறித்து விலங்குகள் நல அமைப்புக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் தீயணைப்பு அலவலர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், ரவிசந்திரன், தங்கவேல் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, கிணற்றில் இருந்த நாயை மீட்டனர்.
3 ஆண்டுகளுக்கு பின் நாய் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பொது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாயை லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் பாராட்டினர்.