பல்லடத்தில் மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், மாக்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், மா.கம்யூ., கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக மா.கம்யூ., கட்சி சார்பில் தாலுகா வாரியாக, கட்சியின் மாநாடு நடத்தப்பட்டு, உள்ளூர் பிரச்னைகள் சார்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன், புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, பல்லடம் தாலுகா மா.கமயூ., கட்சி சார்பில், 10வது ஒன்றிய மாநாடு நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். புதிய ஒன்றியக்குழு செயலாளராக பரமசிவம் உட்பட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.