பல்லடம் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கிணற்றில் விழுந்த மானை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.;
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மங்கலம் அக்ரஹாரபுதூரை சேர்ந்தவர் முத்துவேல். விவசாயி. இவரது தோட்டத்து கிணற்றில், வழி தவறி வந்த மான் ஒன்று, தவறி விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர், இது குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, கயிறு மூலம் மானை உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மான், வனக்காப்பாளர் சிவமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர், அந்த மானை உடுமலை வனப்பகுதியில் விட்டனர்.