ரோட்டில் கிடந்த கொரோனா பாதித்த முதியவர்
பல்லடத்தில் ரோட்டில் கிடந்த கொரோனா பாதித்த முதியவர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
பல்லடம் அருகே அருள்புரம் அண்ணாநகரில் கடந்த 2 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 70வயது முதியவர் ரோட்டில் கிடந்தார். அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் விசாரித்தபோது அவர், தன் பெயர் ராமதாஸ் என்று மட்டும் கூறினார். மற்ற விவரம் கூற முடியவில்லை.
திருப்பூரில் ஒரு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தபோது, கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே சேர்க்க முடியும் என காப்பகத்தினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பல்லடம் மருத்துவமனையில் சேர்க்க 108ஐ தொடர்பு கொண்டனர். அங்கு வந்த பணியாளர்கள் நோயாளியுடன் ஒருவர் வரவேண்டும் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பல்லடம் தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் அறிவுரைப்படி, முதியவர் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.