பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.;

Update: 2021-06-25 14:12 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது  மனைவி தனபாக்கியம்,34, இவர்களுக்கு முத்துக்குமார்,17, என்ற மகனும், சுஷ்மிதா,15, என்ற மகளும் உள்ளனர். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் திருக்குமரன் நகரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காஜா பட்டன் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள ராஜவேலின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை பார்க்க கடந்த 3 ம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்தார். அனைத்து காரியங்களும் முடித்த பிறகு, பல்லடத்திற்கு திரும்பினார். தனது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து துணிகள் சிதறி கிடந்தன.

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த ஒரு லட்சத்து 80ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News