மடத்துக்குளம் பகுதியில் கனமழை: நெல் அறுவடைப்பணி பாதிப்பு

வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளதால், இயந்திரம் மூலமும் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது

Update: 2021-10-17 10:45 GMT

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் கனமழையால்  வயல்களில் சாய்ந்து கிடக்கும் நெல் கதிர்கள்.

பாதிக்கப்பட்ட நெல் வயல்

மடத்துக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் நெல் அறுவடைப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளான கடத்தூர், கணியூர், வேடபட்டி, சோழமாதேவி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், நெல் கதிர்கள் கீழே சாய்ந்து விட்டது. இதனால், நெல் அறுவடை செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விவசாயிகள் கூறுகையில், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. நெல் விளைச்சலாகி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. தற்போது சில நாட்களாக மழை பெய்து வருவதால், நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விட்டது. ஏற்கெனவே விவசாய ஆட்கள் பற்றாகுறையால், இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் நிலை உள்ளது. வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளதால், இயந்திரம் மூலமும் நெல் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது என்றனர்.


Tags:    

Similar News