உடுமலை அமராவதி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்
உடுமலை அமராவதி ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
உடுமலை அடுத்த மடத்துக்குளம் அரசமரத்தடி பகுதியை சேர்ந்த சிலர் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அமராவதி ஆற்றில் ரயில்வே பாலத்திற்கு கீழ் உள்ள பாறையில் நான்கு அடி நீளமுள்ள முதலை ஒன்று படுத்து இருந்தது. இதை பார்த்த அவர்கள், பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என முதலை படுத்து இருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமராவதி ஆற்றில் 5 க்கும் மேற்பட்ட முதலைகள் வந்ததாக தகவல் வெளியானது. தற்போது, அமராவதி ஆற்றில் நான்கு அடி நீளமுள்ள முதலை பாறையின் மீது படுத்து இருந்தது. வனத்துறையினர் இந்த முதலையை பிடித்து, உடுமலை முதலைப் பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.