ஊதியூர்; செம்மறி ஆட்டுக்குட்டிகளை தூக்கிச் சென்ற சிறுத்தையால் மக்கள் பீதி
Tirupur News,Tirupur News Today- ஊதியூர் மலையடிவார பகுதியில் 3 செம்மறி ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை தூக்கி சென்றதால், பொதுமக்கள் மீண்டும் பீதியடைந்தனர்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் மலையடிவார பகுதியில் 3 செம்மறி ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை தூக்கி சென்றது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர்.
காங்கயம் அருகே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கிய சிறுத்தை தனது வேட்டையை மீண்டும் தொடங்கியது. தினமும் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டது. மேலும் சிறுத்தையை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்று 4 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது.அந்த கூண்டுகளில் ஆடுகள் மற்றும் மாட்டுஇறைச்சி வைக்கப்பட்டது.
ஆனாலும் கூண்டில் வைத்துள்ள உணவை சிறுத்தை சாப்பிடவில்லை. மாறாக தோட்டங்களில் கட்டி வைத்துள்ள நாய்களை தொடர்ந்து கொன்று தின்றது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள், கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.
ஆனால், சிறுத்தை போக்கு காட்டும் விதமாக கூண்டுகளில் சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. ஆட்டுக்குட்டிகள் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் - குண்டடம் சாலையில் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செம்மறி ஆட்டுப்பட்டியில் 3 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மாயமாகி உள்ளது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து காங்கயம் வனத்துறை அலுவலர் தனபாலன் கூறியதாவது,
இன்னும் ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக சிறுத்தை குறித்த தகவல் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த 3 ஆட்டுக்குட்டிகள் மாயமானதாக கூறியுள்ளனர். மலையடிவார பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் ஆடுபட்டி உள்ளதால், சிறுத்தை பிடித்திருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் சிறுத்தையின் கால்தடம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இப்பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினர்.