காங்கயம் மடவளாகம் கபாலீஸ்வரர்-பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
Tirupur News. Tirupur News Today- காங்கயம் மடவளாகம் கபாலீஸ்வரர்-பெருமாள் கோவிலில் நடந்த பங்குனி உத்திர தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே மடவளாகத்தில் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த கோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்களின் குல தெய்வங்களாக அருள்பாலித்து வருகின்றன.
சமீப காலமாக இக்கோவில்கள் குலத்தவர், உபயதாரர், நன்கொடையாளர்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டு கடந்த 29-ம் தேதி பஞ்சமூர்த்திகள் பங்குனி உத்திர 7-ம் ஆண்டு தேர் திருவிழா கிராமசாந்தி , கொடியேற்றம், சுவாமிகளின் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து யாக பூஜை, தீபாராதனை மற்றும் 4 குலத்தவர்களின் மண்டப கட்டளை, பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா ,திருக்கல்யாண உற்சவம், மற்றும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலைமன்றத்தின் ஒயிலாட்டம், பெருசலங்கையாட்டம், மகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் என்னும் 5 தேர்களும் வண்ணமலர் அலங்காரத்துடன் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.பல்லாயிர க்கணக்கான பக்தர்கள், குலத்தவர்கள், உபயதாரர்கள்,நன்கொடையாளர்கள் உள்பட அனைவரது கரகோஷத்துடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவில்களை சுற்றி சுமார் முக்கால் கி.மீ., தூரத்திற்கு பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று, பின்னர் நிலையடைந்தது.
விழாவில்\எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சின்னராஜ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கல்யாண சுந்தரம், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இல.பத்மநாபன், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், மாவட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ,திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, காங்கயம் போலீஸ் டிஎஸ்பி பார்த்திபன், பாப்பினி பஞ்சாயத்து தலைவர் கலாவதி பழனிசாமி, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் மற்றும் பாப்பினி, வீரசோழபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடுவர் ராஜா தலைைமயில், சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றமும் நடந்தது.மேலும் பாரிவேட்டை, தெப்ப உற்சவ வீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 7-ம் தேதி கொடி இறக்குதல், தீர்த்தவாரி, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா முடிவடைந்த து. விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், மருத்து வஉத விக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் தங்கமுத்து தலைமையில் தலைவர் வரதராஜ், செயலாளர் ராமசாமி, பொருளாளர் அர்ஜூனன் முன்னிலையில் கோவிலின் கொங்கு வோளாளர் , தோடை, கண்ணந்தை, காடை, கீரை குலத்தோர் சங்கத்தினரும், பாப்பினி ,வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர்.