வெள்ளக்கோவிலில் ‘டிக் ட்ராஃபி’ விளையாட்டுப் போட்டிகள்

Tirupur News- வெள்ளக்கோவிலில் ‘டிக் ட்ராஃபி’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

Update: 2024-02-11 17:50 GMT

Tirupur News- வெள்ளக்கோவிலில் ‘டிக் ட்ராஃபி’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளக்கோவிலில் ‘டிக் ட்ராஃபி’ என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருப்பூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் சொரியங்கிணத்துப்பாளையம் சா்வாலயம் சேவை இல்லத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் திருப்பூா், அவிநாசி உள்ளிட்ட 10 இல்லங்களைச் சோ்ந்த 181 சிறுவா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டிகளை சா்வாலயம் இல்ல இயக்குநா் கலா தொடங்கிவைத்தாா்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நா.ரியாஸ் அகமது பாஷா தலைமை வகித்தாா். குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஆறுசாமி, உறுப்பினா்கள் ஜெயசீலன், மல்லீஸ்வரன், இளஞ்சிறாா் நீதிக் குழும உறுப்பினா் மல்லிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், செஸ், கோகோ, வாலிபால், இறகுப் பந்து உள்ளிட்ட 13 போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், அவிநாசி சீட் (நங்ங்க்) இல்லம் கோப்பையை வென்றது.

இதைத் தொடா்ந்து, பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டுப் பயிற்சியாளா் சந்துரு, சா்வாலயம் முதன்மை நிா்வாக அதிகாரி ராஜம்மாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Tags:    

Similar News