கோவிலில் திருட முயற்சி; போலீசார் விசாரணை
திருப்பூரை அடுத்துள்ள செங்கப்பள்ளியில், கோவிலில் திருட முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
ஊத்துக்குளி பகுதி, செங்கப்பள்ளியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின், பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், மர்ம நபர்கள் சிலர், கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைக்க முயற்சி செய்தனர். அப்போது, கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்தது. இதனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.