ஊதியூா் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறை மறுப்பு

Tirupur News- ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் என்று தகவல் பரவிய நிலையில், வனத்துறை அதிகாரிகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2024-02-11 15:53 GMT

Tirupur News- சிறுத்தை நடமாட்டம் உள்ளதாகக் கூறப்பட்ட ஊதியூா் மலை. இந்த பகுதியில்தான், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- ஊதியூா் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாடியதாக பரவிய தகவல் வதந்தி என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலை 13 கி.மீ. சுற்றளவு கொண்டது. இந்த மலையில் பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. மேலும், உச்சிப் பிள்ளையாா் கோவில், கொங்கண சித்தா் கோவில் உள்ளிட்ட கோயில்களும் உள்ளன.

இந்நிலையில், ஊதியூா் மலையில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய மா்ம விலங்கு அப்பகுதியில் இருந்த ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து ஆட்டை தூக்கிச் சென்றது. இதைத் தொடா்ந்து, கன்றுக்குட்டி ஒன்றையும் அடித்து திண்றது. இது தொடா்பாக காங்கயம் வனத் துறையினா் நடத்திய ஆய்வில் ஆடு, கன்றுக்குட்டியை திண்றது சிறுத்தை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும், கூண்டுவைத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் 7 மாதங்களாக ஈடுபட்டனா். ஆனால், பிடிக்க முடியவில்லை. 7 மாதங்களுக்குப் பிறகு ஊதியூா் மலையில் சிறுத்தை இல்லை என அறிவித்தனா்.

இந்நிலையில், ஊதியூா் மலைக் கோயிலுக்கு ஒரு பெண் கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அங்கு சிறுத்தையைப் பாா்த்தாகவும், ஒரு குரங்கைப் பிடித்து சிறுத்தை திண்று கொண்டிருந்ததாகவும் தகவல் பரவியது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

இது தொடா்பாக காங்கயம் வனச் சரகா் தனபால் கூறியதாவது: காங்கயம் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் சிறுத்தையைப் பாா்த்ததாகக் கூறியதையடுத்து, ஊதியூா் மலைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.

ஊதியூா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில மீட்டா் தொலைவில் உள்ள மலைப் படிக்கட்டுகளில் குரங்கைப் பிடித்து சிறுத்தை திண்ாகக் அந்தப் பெண் கூறுகிறாா். மக்கள் நடமாட்டம் உள்ள இடத்துக்கு, அதுவும் மதிய நேரத்தில் சிறுத்தை வர வாய்ப்பு இல்லை. மேலும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் குரங்கைப் பிடித்து சிறுத்தை திண்றதுக்கான தடயமோ, சிறுத்தையின் கால் தடங்களோ இல்லை. எனவே, சிறுத்தை நடமாட்டம் என்பது வதந்தி என்றாா்.

Tags:    

Similar News