காங்கேயம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில், பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 70 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

Update: 2021-06-17 11:23 GMT

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 22 ஆயிரத்து 600 கட்டிடங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 729 ஏக்கர் நிலம் பயிர் செய்யப்படுகிறது.

இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவிலியார்பாளையத்தில் உள்ள, மிகவும் பிரசித்தி பெற்ற பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்ரமிப்பில் இருந்தது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையாளர் நடராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்று சிவிலியார்பாளையம் பரமசிவன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 70 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

Tags:    

Similar News