சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் கண்ணாடி பெட்டி உள்ளது. இதில் ஆண்டவன் உத்தரவுப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.
சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை பற்றி கூறுவார். கோவில் நிர்வாகத்தினர் கோவிலில் பூவைத்து சுவாமியிடம் உத்தரவு கேட்பார்கள். அவ்வாறு உத்தரவானதும் குறிப்பிட்ட அந்த பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
மற்றொரு பக்தரின் கனவில் சுவாமி வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்துறையை சேர்ந்த பவானி என்பவரது, கனவில் குங்குமம் வைத்து பூஜை செய்ய ஆண்டவன் உத்தரவிட்டுள்ளார். இதை கோவிலில் வாக்கு கேட்டு உறுதிப்படுத்திய பிறகு நேற்று ஆண்டன் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது.