சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரில் முகூா்த்தக்கால் பூஜை

Tirupur News- காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரில் முகூா்த்தக்கால் பூஜை நடைபெற்றது.

Update: 2023-11-30 10:01 GMT

Tirupur News- காங்கயம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தேரில் முகூா்த்தக்கால் பூஜை நடைபெற்றது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தேரில் முகூா்த்தக்கால் பூஜை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே அமைந்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தோ்த்திருவிழா 3 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், வரும் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக தேரில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி, கோயில் சிவாச்சாரியா்கள் வேதங்கள் சொல்ல, முகூா்த்தக் காலில் புனிதநீா் தெளித்து, சந்தனம் பூசி, முகூா்த்தக் காலில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 10 மணியளவில் முகூா்த்தக்கால் மலையில் இருந்து படி வழியாக கொண்டு வரப்பட்டு, அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதைத் தொடா்நது, தேரின் நான்கு பக்கங்களிலும் முகூா்த்தக்கால் நட்டு பூஜைகள் செய்யப்பட்டன. சுவாமி சன்னதியின் மூலவா் கையில் உள்ள வேல் முகூா்த்தக் காலுக்கு வந்தது. பின்னா் வேல் மலைக் கோயிலுக்கு கொண்டுச் செல்லப்பட்டு, சன்னதியில் உள்ள மூலவரிடமே வைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, புதன்கிழமை காலை 8 மணி பகல் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. பகல் 12 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சியில் கோயில் சிவாச்சரியா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News