காங்கயம்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை

Tirupur News- காங்கயம், எல்லப்பாளையம்புதூா் பகுதி மக்கள், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி அமைச்சாிடம் மனு அளித்தனர்.;

Update: 2023-11-11 17:11 GMT

Tirupur News- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மக்கள் கோரிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-  காங்கயம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து, அப்பகுதி மக்கள் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காங்கயம், எல்லப்பாளையம்புதூா் ஊராட்சிக்குட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த 6 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிடா் நலத் துறை, ஊராட்சி நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா் கள ஆய்வு செய்து 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கலாம் என உறுதி செய்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா், காங்கயம் வட்டாட்சியா் என தொடா்ந்து 6 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.

எனவே, சொந்த வீடோ அல்லது வீட்டுமனை பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News