காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்பு

காங்கேயத்தில் 5 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

Update: 2021-06-29 14:20 GMT

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காடையூரை சேர்ந்தவர் சரவணன். இவர், தேங்காய் களம் நடத்தி வருகிறார். இவரது தேங்காய் களத்தில் கோவை மாவட்டம் கிணத்து கடவு பகுதியை சேர்ந்த 3 பெண்கள், சிறுமி உள்பட 5 பேர் சில ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. புகாரின் பேரில், தாராபுரம் சப் கலெக்டர் பொறுப்பு ரங்கராஜன், காங்கேயம் தாசில்தார் சிவகாமி தலைமையிலான அதிகாரிகள் சென்று, அங்கு வேலை பார்த்த 2 குடும்பத்தை சேர்ந்த 5 பேரை மீட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News