காங்கயம் பகுதியில் நாளை (21ம் தேதி) மின்தடை
Tirupur News,Tirupur News Today- காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில், மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை (திங்கட்கிழமை) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
Tirupur News,Tirupur News Today- காங்கயம் பகுதியில் உள்ள ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின்நிலையங்களில், பராமரிப்பு பணி நடப்பதால், மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் கணேஷ் கூறியிருப்பதாவது,
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை (21-ம் தேதி) திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி
ஓலப்பாளையம் துணை மின் நிலையம்:
ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம் மற்றும் முருகன்காட்டு வலசு.
பழையகோட்டை துணை மின் நிலையம்:
பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம் மற்றும் கண்ணம்மாபுரம் ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.