திருப்பூர் நகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூர் நகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-05-08 16:36 GMT

திருப்பூர் நகரின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் துணை மின் நிலையப்பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், கே.வி.ஆர்.நகர், மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், கருவம்பாளையம், எஸ்.ஆர்.நகர், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பூர் மாநகர மக்கள்  அதற்கு தகுந்தாற் போல் தங்களது வேலைகள், வெளியூர் பயணங்கள் மற்றும் தங்களது திட்டங்களை அமைத்துக்கொள்ளும்படியும் மின்வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News