காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் நாளை ( 23ம் தேதி) மின்தடை
Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூரில் நாளை ( 23ம் தேதி) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா் துணை மின்நிலையத்தில் நடக்க உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.
ஊதியூர் துணை மின்நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வடசின்னாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.