ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் வரும் 19-ம் தேதி மின்தடை
Tirupur News- ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால்,19-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Tirupur News,Tirupur News Today- இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளா் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளதால், வருகிற 19-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. அதனால், அன்று காலை முதல் மாலை வரை, கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
ஊத்துக்குளி துணை மின் நிலையம்:
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ். வி.ஜி.புதூா், ரெட்டியபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாளையம், மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலவு, வயக்காட்டு புதூா் மற்றும் ஏ.கத்தாங்கன்னி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.
செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:
மின்தடை பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூா், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.