காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை துவக்கம்

Tirupur News- காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.;

Update: 2024-01-25 09:41 GMT

Tirupur News- காங்கயம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் மு.பெ சாமிநாதன்.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் பேருந்து நிலையத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து இரு வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்நது அவா் பேசியதாவது,

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிா் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும்  மகளிா் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக காங்கயம் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருக்கு கொடுமுடி- கோபி (முத்தூா், காங்கயம், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, குன்னத்தூா்) பொள்ளாச்சி - கரூா் (குடிமங்கலம், தாராபுரம், மூலனூா் மற்றும் சின்னதாராபுரம்) ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, சிவன்மலை ஊராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மகேஷ்குமாா், பொது மேலாளா் (தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்) மாரியப்பன், திமுக காங்கயம் ஒன்றியச் செயலாளா் சிவானந்தம், படியூா் ஊராட்சித் தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News