ஸ்டாலின் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்; காங்கயம் அருகே அமைச்சர்கள் ஆய்வு

Tirupur News,Tirupur News Today- வரும் 24ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்க உள்ளது. காங்கயம் அருகே, இதற்கான இடத்தை நேற்று அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-09-06 03:42 GMT

Tirupur News,Tirupur News Today-  காங்கயம் அருகே, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள். 

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே வருகிற 24-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிவாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டம் நடக்கும் இடம், மேடை அமைக்கும் பணியை அமைச்சர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி வாரியாக, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தலைமை வகித்துப்பேசுகிறார்.

அதற்காக தொட்டியபாளையத்தில், 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த இடத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்  நடக்க உள்ளது. அப்போது கூட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை வரவேற்பது, கூட்டத்துக்கான மேடை அமைப்பது, இருக்கை வசதி செய்வது, பந்தல் அமைப்பது, வாகன நிறுத்தம் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி் செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், காங்கயம், வெள்ளகோவில் நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News