காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வெற்றி: காங்கேயத்தில் பரபரப்பு

காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வெற்றி: காங்கேயத்தில் பரபரப்பு;

Update: 2022-03-04 05:15 GMT

காங்கேயம் நகராட்சி தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவின் சூர்ய பிரகாஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவியை, காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இங்கு, மொத்தம் உள்ள 18 வார்டுகளில், திமுக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அவ்வகையில், 10வது வார்டில் வெற்றி பெற்ற ஹேமலதாவின் பெயர், நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக, திமுகவின் சூர்ய பிரகாஷ் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இது, காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக தலைமை ஒதுக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, வார்டு கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்த சூர்ய பிரகாஷை, நகராட்சி தலைவராக தேர்வு செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News