காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில், திட்டப்பணிகள் துவக்கம்
Tirupur News,Tirupur News Today-காங்கயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை, அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர், சிவன்மலை, படியூர், பாப்பினி, வீரணம்பாளையம் மற்றும் தம்மரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகளை, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
அதன்பின், அமைச்சர் மு.பெ சாமிநாதன் கூறியதாவது,
காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலசமுத்திரம்புதூர் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அய்யனாரப்பன் குட்டை புனரமைக்கும் பணி, ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையம் காலனியில் ஆயில் மில் அருகில் 1-வது குறுக்கு வீதியில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, ரூ.9.10லட்சம் மதிப்பீட்டில் கத்தாங்கன்னியில் புதிய கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, ரூ.13.16 லட்சம் மதிப்பீட்டில் ரெட்டிபாளையத்தில் புதிய நியாய விலைக்கடை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் 42 புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படியூர் ஊராட்சியில் கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் படியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் யூனியன் சேர்மன் மகேஷ் குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை பஞ்சாயத்து தலைவர் துரைசாமி, துணை தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர் சிவகுமார், படியூர் பஞ்சாயத்து தலைவர் ஜீவிதா சண்முக சுந்தரம் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.