காங்கயம்; மருதுறை ஊராட்சியில் ரூ.7.31 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம் திறப்பு

Tirupur News- காங்கயம் அருகேயுள்ள மருதுறை ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.;

Update: 2023-12-27 09:44 GMT

Tirupur News- காங்கயம் அருகேயுள்ள மருதுறை ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகேயுள்ள மருதுறை ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.7.31 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உயா்மட்ட பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பரஞ்சோ்வழி ஊராட்சியில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் புதிய தாா் சாலை அமைக்கும் பணியையும், மருதுறை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையையும் திறந்துவைத்தாா்.


மேலும், மக்கள் சேவை முகாம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 362 பயனாளிகளுக்கு ரூ.16.15 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளாா் உ.பழனியப்பன், கோட்டப் பொறியாளா் கே.முருகேசன், உதவி செயற்பொறியாளா் இளம்பூரணம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேனி வரதராஜ், மருதுறை ஊராட்சித் தலைவா் செல்வி சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News