கால்நடை சந்தைகளில் ரூ. 20 லட்சம் விற்பனை

Cattle Market - காங்கயம் சார்ந்த பகுதிகளில் நடந்த கால்நடை சந்தைகளில், ரூ. 20 லட்சத்துக்கு, ஆடு, மாடுகள் விற்பனை நடந்தது.;

Update: 2022-08-01 06:32 GMT

காங்கயம் பகுதி கால்நடை சந்தைகளில், ஆடு, மாடுகள் விற்பனை ரூ. 20 லட்சத்துக்கு நடந்தது.

Cattle Market - காங்கயம், நத்தக்காடையூர், பழையகோட்டை மாட்டுதாவணியில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிறு தோறும் நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 81 கால்நடைகள் வந்தன. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 55 கால்நடைகள், 20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News