காங்கயம்; தம்மரெட்டிபாளையம் பகுதியில் ஆயில் மில்லில் தீ விபத்தால் பரபரப்பு

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியில் ஆயில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.

Update: 2023-05-24 03:07 GMT

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியில் ஆயில் மில்லில் தீ கொழுந்து விட்டு எரிந்த காட்சி.

Tirupur News. Tirupur News Today- காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியில் ஆயில் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு, எந்திரங்கள் எரிந்து சேதமானது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையம் பகுதியில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆலை உள்ளது. இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவு காரணமாக தேங்காய் பருப்பு மூட்டைகளில் தீப்பிடித்து எரிய தொடங்கி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ மளமளவென மில்லில் இருந்த தேங்காய் பருப்பு மற்றும் எந்திரங்கள் போன்றவற்றில் பரவி எரிந்தது.

இதுகுறித்து, காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ராஜு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஊத்துக்குளியில் இருந்து ஒரு தீயணைப்பு நிலைய வாகனம் வரவழைக்கப்பட்டு 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான எந்திரங்கள் மற்றும் தேங்காய் பருப்புகள், தேங்காய் புண்ணாக்குகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின்சார கசிவு காரணம் எனக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News