ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக்கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மளிகைக்கடைகள், இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்தி ரெட்டிபாளையத்தில், இரண்டு மாட்டிறைச்சி கடைகளை திறக்கப்பட்டு, இறைச்சி விற்பனை நடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் போலீஸார், இன்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, கடையை திறந்து மாட்டிறைச்சி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 14, கிலோ இறைச்சியும், ஒரு கடைக்காரருக்கு ரூ.1,500, அபராதமும், மற்றொரு கடைக்காரருக்கு ரூ.3, ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு விதிகளுக்கு புறம்பாக, கடையை திறந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காங்கயம் நகராட்சி கமிஷனர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.