திருப்பூர்: மகளிடமே அத்துமீறிய காமுகன் கைது
திருப்பூரில், பெற்ற மகளிடமே அத்துமீறிய காமுகத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா, 36 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அப்பகுதி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அவர் தனது 12 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது அம்மாவிடம், பாதிக்கப்பட்ட மகள் கூறியுள்ளார்.
காங்கயம் அனைத்து மகளிர் போலீஸில், தாயார் புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்த, தாராபுரம் சிறையில் அடைத்தனர்.