அணைப்பாளையம் தடுப்பணை திறப்பால், விவசாயிகள் மகிழ்ச்சி
Tirupur News- அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.;
Tirupur News,Tirupur News Today- நொய்யல் ஆற்றில் இருந்து செல்லும் தண்ணீர் காவிரியுடன் கலந்து தண்ணீர் சென்றது. பாசனத்திற்கு பயன்படும் வகையில் நொய்யல் ஆற்றில் 1992-ம் ஆண்டு ரூ.13.51 கோடி ரூபாய் செலவில் சின்ன முத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலூகாவில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவுள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு, ஊட்டுக்கால்வாய் வழியாக திறக்கப்படும். இதன் மூலம் கே.பரமத்தி, அரவக்குறிச்சி, கரூர் தாலூக்காவில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கால்வாய்கள் உள்ளது.
திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் தடுப்பணைக்கு தண்ணீர் திறந்து விடுவது 2004-க்கு பிறகு நிறுத்தப்பட்டது. மழை காலத்தில் நொய்யல் ஆற்றில் வரும் வெள்ளநீரை, பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். 15 வருடங்கள் கழித்து 2019-ம் ஆண்டில் முத்தூர் தடுப்பணையில் இருந்து நொய்யல் வெள்ளநீர் அப்போது திறக்கப்பட்டது. இந்த ஆண்டு நொய்யல் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. தற்போது செல்லும் வெள்ளநீரில் டிடிஎஸ் 660 க்கும் குறைவாக உள்ளது.
இதையடுத்து குப்பகவுண்டன்வலசு அருகே உள்ள அணைப்பாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் நேற்று முதல் ஊட்டு கால்வாய் வழியாக வினாடிக்கு 160 கன அடி வீதம் சின்னமுத்தூர் நொய்யல் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது நொய்யல் ஆற்றில் மழை நீர் வந்து கொண்டிருப்பதால் 5-ம் ஆண்டாக அணைப்பளையம் தடுப்பணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஊட்டு கால்வாய்க்கு திறந்தது போக நொய்யல் ஆற்றில் 250 கன அடி வரை காவிரிக்கு சென்றது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.