காங்கயத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு

Water Supply Pipe - காங்கயத்தில் நிலுவையில் இருந்த வரி இனங்களை செலுத்தாததால், 12 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.;

Update: 2022-09-08 04:44 GMT

காங்கயத்தில், 12 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Water Supply Pipe -காங்கயம் நகராட்சியில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொடுத்த கால அவகாசத்தை கடந்தும், இன்னும் நிலுவை தொகைகள் செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகர் பகுதிக்குட்பட்ட கோவை சாலை, மூர்த்திரெட்டிபாளையம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளின் 12 குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீர் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவித்துள்ளார். 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News