வெள்ளக்கோவில் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த கோரிக்கை

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-12-01 08:57 GMT

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சியை தரம் உயா்த்த கோரிக்கை (கோப்பு படம்) 

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் என நேற்று நடந்த கூட்டத்தில் அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளக்கோவில் நகா்மன்ற கூட்டம் நேற்று நடந்தது. நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்  வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திட்டப்பணிகள் நிறைவேற்றம் உள்பட 46 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெள்ளக்கோவில் இரண்டாம் நிலை நகராட்சியை முதல் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது குறித்த தீா்மான விவரம் வருமாறு:

கடந்த 2004-ம் ஆண்டு வெள்ளக்கோவில் பேரூராட்சி மூன்றாம் நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டது. பின்பு 2010--ல் இரண்டாம் நிலை நகராட்சியானது.

அரசாணைப்படி, நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 6 முதல் 9 கோடி இருந்தால் முதல் நிலை, ரூ. 9 முதல் 15 கோடி இருந்தால் தோ்வு நிலை, ரூ. 15 கோடிக்கு மேல் இருந்தால் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் நகராட்சியின் கடந்த மூன்றாண்டு வருவாய் தணிக்கைச் சான்றுகளின்படி கடந்த 2020-21-ல் ரூ. 14.67 கோடி, 2021-22-ல் ரூ. 14.70 கோடி, 2022-23-ல் ரூ. 20.71 கோடியாக வருவாய் உள்ளது. இதனால் தரம் உயா்த்துவதற்குத் தேவையான தகுதிகள் உள்ளன.

எனவே, அனைத்துத் தகுதிகளும் உள்ள வெள்ளக்கோவில் நகராட்சியைத் தரம் உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

Tags:    

Similar News