ஆளில்லாத குட்டி விமானம் மூலம் ஊரடங்கு கண்காணிப்பு

காங்கேயம் பகுதியில் ஊரடங்கு செயலில் உள்ளதா என ஆளில்லாத குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு;

Update: 2021-05-11 13:43 GMT

கொரோனா ஊரடங்கை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காட்சி.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .இதைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக பகல் 12 மணிக்கு பிறகு ரோடுகள் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை கண்காணிக்கும் வகையில் காங்கேயத்தில் டிஎஸ்பி தனராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வீடியோ கேமராவுடன் கூடிய ஆளில்லா குட்டி விமானம் மூலம் காங்கேயம் நகரப்பகுதிகளில் இன்று கண்காணிக்கப்பட்ட

. இதன் மூலம் காங்கேயன் நகர முக்கிய பகுதிகளான போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதி, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதி ,கடைவீதி திருப்பூர் ரோடு ,கோவை ரோடு ,கரூர் ரோடு, தாராபுரம் ரோடு, சென்னிமலை ரோடு ,பழையகோட்டை ரோடு ஆகிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டது.


Tags:    

Similar News