வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள் பறிமுதல்

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி, பீகாரில் இருந்து, காங்கேயத்திற்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்த 2 சொகுசு பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-10 09:50 GMT

வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்ததாக, காங்கேயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பஸ்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்று வட்டாரத்தில், நூற்றுக்கணக்கான தேங்காய் எண்ணெய் ஆலைகள் மற்றும் நூல் மில்கள் செயல்படு வருகின்றன. இந்த ஆலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆலைகள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மறைமுகமாக பல நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலத்தில் இருந்து, 67 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஒரு சொகுசு பஸ், அசாமில் இருந்து 47 தொழிலாளர்களை ஏற்றி வந்த மற்றொரு பஸ்சும்,  காங்கேயம் வந்தது. இது குறித்து தகவல் அறிந்த காங்கேயம் தாசில்தார் சிவசாமி, இரண்டு சொகுசு பஸ்களையும் பறிமுதல் செய்தார். மேலும், வடமாநிலங்களில் வந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

காங்கயேம் பகுதியில் தற்போது தொழிலாளர்கள் பற்றாகுறை நிலவுதால், ஆலை அதிபர்கள் இதுபோல் குறுக்கு வழியை பயன்படுத்தி தொழிலாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் திருப்பூரில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, சட்டத்திற்கு புறம்பாக தொழிலாளர்களை அழைத்து வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News