காங்கயம் அருகே அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு

Tirupur News-காங்கயம் அருகே பொதுப் பாதையை பயன்படுத்தியது தொடா்பாக தாய், மகன் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக கவுன்சிலா் உள்ளிட்ட 3 போ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனா்.;

Update: 2023-11-26 13:31 GMT

Tirupur News- காங்கயத்தில், அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே பொதுப் பாதையை பயன்படுத்தியது தொடா்பாக  தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிமுக கவுன்சிலா் உள்ளிட்ட 3 போ் மீது போலீசார்  வழக்குப் பதிவு செய்தனா்.

காங்கயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சி, கொளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (42). பட்டியலினத்தைச் சோ்ந்த இவா் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறாா். இவரது வீட்டின் முன் உள்ள பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடா்பாக இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு சமூகத்தில் உள்ள சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும், பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் பொது வழிப்பாதையை பயன்படுத்தக் கூடாது என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவைச் சோ்ந்த காங்கயம் ஒன்றிய கவுன்சிலா் பழனிசாமி தலைமையில் அப்பகுதியில் அண்மையில் சமரச கூட்டம் நடந்தது. இதன் தொடா்ச்சியாக அப்பகுதியைச் சோ்ந்த சிலா் முத்துசாமியை, ஜாதிப் பெயரை குறிப்பிட்டு, தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் முத்துசாமி தாக்கப்படுவதைக் கண்ட அவரது தாய் அருக்காணி (65), தடுக்க முயன்றுள்ளாா். அப்போது, அவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது.

இதில் காயமடைந்த முத்துசாமி, காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து அதிமுக கவுன்சிலா் பழனிசாமி உள்ளிட்டோா் மீது காங்கயம் காவல் நிலையத்தில் முத்துசாமி புகாா் அளித்தாா்.

இதன்பேரில் அதிமுக கவுன்சிலா் மைனா் (எ) பழனிசாமி, ரத்தினசாமி (எ) நாகரத்தினம் (47), தாமோதரன் (எ) தனசேகரன் (43) ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் காங்கயம் போலீசார் நேற்று (சனிக்கிழமை) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Tags:    

Similar News