ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

Auto Accident - காங்கேயம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார்.;

Update: 2022-08-16 02:15 GMT
Auto Accident | Accident Tamil

காங்கயம், முத்துார் அருகே, ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் உயிரிழந்தார்.

  • whatsapp icon

Auto Accident - முத்தூர் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 55). ஆட்டோ டிரைவர். நேற்று முருகேசன், அவரது மனைவி சத்யா (35), மகன் தீபக் (10) உறவினர்கள் ருத்ரபசுபதி (37), லலிதாம்பாள் (75), கந்தசாமி (65), சித்ரா (55) ஆகிய 7 பேரும், திருப்பூரில் உள்ள  கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சுவாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு வீட்டிற்கு காங்கயம் - முத்தூர் சாலை வழியாக வந்தனர். ஆட்டோவை முருகேசன் ஓட்டி வந்தார். இரவு  7 மணியளவில் காங்கயம் - முத்தூர் சாலையில் வந்தபோது, முருகேசன் ஓட்டிச் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் முருகேசன் மற்றும் சத்யா, லலிதாம்பாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேரும் சிறு காயங்களுடன் தப்பினர்.

படுகாயமடைந்த முருகேசன், சத்யா, லலிதாம்பாள் ஆகியோரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே  முருகேசன் இறந்தார். படுகாயங்களுடன் இருந்த சத்யா மற்றும் லலிதாம்பாள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News