ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் சுவாமி தரிசனம்
Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.;
Tirupur News,Tirupur News Today- காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். சிவபெருமானால் படைக்ககூடிய அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்கக்கூடிய நாளாக ஐப்பசி மாத பவுர்ணமி நாள் அமைகிறது. ஆகவே சிவபெருமான் எழுந்தருளும் அனைத்து கோவில்களிலும் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் நேற்று மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. 10 கிலோ சாதத்தை கொண்டும், காய்கறி, பழங்கள் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் காங்கயம் அருகே உள்ள சின்னாரிபட்டி கம்பம் மாதேசிலிங்கம் கோவில், காங்கயம் காசிவிஸ்வநாதர் கோவில் உள்பட காங்கயம் பகுதியில் உள்ள கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அதே போல், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லூரில் உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பல்லடத்தை அடுத்துள்ள நவகிரக்கோட்டை சித்தம்பலம் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில், நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.