வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூல்
Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூலாகியுள்ளது. வரி செலுத்தியவர்களுக்கு நகராட்சி நிா்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சியில் 86 சதவீதம் சொத்து வரி வசூலாகியுள்ள நிலையில், வரி செலுத்திய சொத்து உரிமையாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன், நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
2023 - 24-ம் ஆண்டு சொத்து வரி வசூலில் வெள்ளக்கோவில் நகராட்சி மாநிலத்தில் முதலிடம் வகிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 138 முதல், இரண்டாம், மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ளன. இவற்றில் வெள்ளக்கோவில் நகராட்சியில் 2023 - 24-ம் ஆண்டுக்கான சொத்து வரி ஒட்டுமொத்தமாக இதுவரை 86 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுவே மாநிலத்தின் அதிக வரி வசூலாக உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. நகராட்சி 100 சதவீத வரி வசூலை எட்ட மீதமுள்ள 14 சதவீதம் போ்களும் தங்களுடைய வரியினைச் செலுத்தி நிா்வாகத்துக்கு பெருமை தேடித் தர வேண்டும், என்றனா்.