சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா் எல்இடி விளக்குகள்
Tirupur News-காங்கயம் அருகே உள்ள சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.;
Tirupur News,Tirupur News Today- காங்கயம் அருகே உள்ள சிவன்மலை கோயில் மலைப் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 54 சோலாா் எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு விசேஷ நாள்களில் காங்கயம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் வரும் பொருட்கள், இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பொருட்கள் அடிப்படையில், மக்களுக்கு ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து தெரிந்துக்கொள்ளும் விதமாக, பக்தர்களின் கனவில் கடவுள் முருகப் பெருமானே வந்து சொல்வதாக ஒரு ஐதீகம் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மலைக்கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் புதிய தாா்சலை புதுப்பிக்கப்பட்டது. எனினும் மலைப் பாதையில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு மின்சார வசதிகள் ஏதுமில்லை.
இதையடுத்து, கோவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் சுதாகரன், அகல்யா, சந்தியா, சாமி ஆகியோா் ரூ.15 லட்சம் மதிப்பில் 54 சோலாா் எல்இடி விளக்குகளை அமைத்துள்ளனா். தானியங்கி வகையில் செய்படும் வகையில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மலைப் பாதையில் மாலை நேரங்களில் வாகனங்களில் செல்வதற்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் என்று பக்தா்கள் தெரிவித்துள்ளனா்.