14 வயது சிறுமிக்கு திருமணம்; 5 பேர் கைது

திருப்பூரை அடுத்த காங்கயம் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-24 15:11 GMT

காங்கயம் அருகே, 14 வயது சிறுமியை  திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேர் கைது.  

கர்நாடக மாநிலம், நெகரம் உக்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 25). அங்குள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் 14 வயது சிறுமிக்கும், காங்கயம், பாப்பினி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் இருவீட்டார் சம்மத்துடன் திருமணம் நடந்தது. இதுகுறித்து, 'சைல்டு லைன்' அமைப்பினருக்கு தகவல் தெரியவந்தது.

இதையடுத்து ஊரக நல அலுவலர் அம்மாசை, காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த கோவிந்தராஜ் மற்றும் உடனிருந்து திருமணத்தை நடத்தி வைத்த கோவிந்தராஜின் தந்தை நாராயணனன் (45), தாயார் நாகம்மாள் (43), சிறுமியின் தந்தை இளங்கோவன் (45), தாயார் சுனிதா (39) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

Similar News