காங்கேயம் அருகே அறுந்து கிடந்த மின்வயரால் மின்சாரம் தாக்கி இளைஞர் படுகாயம்

காங்கேயம் அருகே அறுந்து கிடந்த மின்வயரால் மின்சாரம் தாக்கி இளைஞர் படுகாயம்;

Update: 2021-07-02 15:52 GMT

கோப்பு படம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நத்தக்காடையூர் சித்தம்பலத்தை சேர்ந்தவர் சுரேஷ்,35. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் பாதுகாப்பிற்கு கம்பிவேலி அமைத்து உள்ளார். இந்த கம்பிவேலி மீது, அவ்வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்தது. இதை கவனிக்காமல், கம்பிவேலி மீது இருந்த தென்னைமட்டைகளை சுரேஷ் அப்புறப்படுத்தினார். அப்போது மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். மயக்கநிலையில் மீட்கப்பட்ட சுரேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காங்கேயம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Similar News