திருப்பூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக
அதிமுகவின் கோட்டையாக இருந்த திருப்பூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.;
திருப்பூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் திமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில் ஆகிய 6 நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.