தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.;
தாராபுரம் சுற்று வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று மதியம் 2 மணி அளவில் தாராபுரம் சுற்றுப்பகுதியில் மழை பெய்தது. மாலை 4 மணி வரை நீடித்தால் இந்த மழையால், பெரியகடை வீதி, பூக்கடை கார்னர், சின்னகடை வீதி, அரசமரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஓடியது. மழையின் காரணமாக கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.