தாராபுரம் அமராவதி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

Update: 2021-09-12 09:15 GMT

தாராபுரம் புதிய மேம்பாலத்தின் கீழ், அமராவதி ஆற்றில் விநாயகர் சிலையை கரைத்த பக்தர்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,  நடப்பாண்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் விசர்ஜன நிகழ்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

அதே நேரம் தனிப்பட்ட முறையில் சிலை வைத்து வழிபட அனுமதி தரப்பட்டது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தி நாளான கடந்த 10- ந்தேதி தாராபுரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் , தனிப்பட்ட முறையில் வைக்கப்பட்டன. அந்த சிலைகளுக்கு கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், அவல், பொறி, பழங்கள் படைத்து,பூஜை செய்து பக்தர்களும்,பொதுமக்களும் வழிபட்டனர்.

இந்நிலையில், வீடுகள், தனிப்பட்ட முறையில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள், சிறு களிமண் சிலைகளை வாகனங்களில் எடுத்து சென்று தாராபுரம் அமராவதி ஆற்றில், அகஸ்தீஸ்வரர் கோவில், புதிய மேம்பாலம், சீத்தக்காடு உட்பட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கரைத்தனர்.

Tags:    

Similar News