வேலுமணி வீட்டில் சோதனை; தாராபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

வேலுமணி வீட்டில் சோதனையை கண்டித்து தாராபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2021-08-10 14:24 GMT
வேலுமணி வீட்டில் சோதனை;  தாராபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த சோதனையை கண்டித்து, தாராபுரத்தில் அதிமுக.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • whatsapp icon

திருப்பூர் புறநகர் அதிமுக கிழக்கு மாவட்டம், தாராபுரம் நகர கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட்டு, மக்கள் நலனின் திமுக., கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக.,வினர் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக.,வினரிடம் போலீஸார் பேச்சு வார்த்த நடத்தி, கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News